தேர்வு முறைகேடு புகார்களை தடுக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இணையத் தளத்தில், தேர்வர்களின் விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் விடுத்துள்ள அறிவிப்பில், குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் TNPSC இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இணையத் தளத்தில் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், தேர்வு முறைகேடு புகாரை தடுக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சீர்திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய தேர்வர்கள், தங்களின் OTR கணக்கு மூலமாக, உரிய கட்டணத்தை செலுத்தி அவரவர் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.







