இந்தோனேசியாவில், ஜகார்த்தாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மசூதியின் கோபுரங்கள் இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் மசூதி ஒன்று உள்ளது. இங்கு நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மசூதியின் கோபுரம் தீயில் மளமளவென எரியதொடங்கியது. மேலும் கோபுரத்தின் சில பகுதிகள் இடிந்து கீழே விழுந்தன. இந்நிலையில், மசூதி கோபுரம் சரிந்து விழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், மசூதி கோபுரம் தீ விபத்தில் வெடித்து சிதறுவது போன்று உள்ளது. மேலும் அப்பகுதியின் சாலைகளில் நெருப்பு துண்டுகள் பறந்து விழுவதையும் பார்க்க முடிகிறது. இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், தீ எவ்வாறு பற்றியது தொடர்பான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என்றும் மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
BREAKING: The dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Koja, Indonesia has collapsed after being engulfed in flames during renovations.
The cause of the incident is under investigation. pic.twitter.com/rsLxxAGPlv
— Benny Johnson (@bennyjohnson) October 19, 2022
மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அப்பகுதியின் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி கொள்ளவும், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தும் வரை அந்த பகுதிக்கு, பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மசூதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-இரா.நம்பிராஜன்







