விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!

அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதி கட்டுவதுக்காக அயோத்தியில் நிலத்தை ஒதுக்கித் தர உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியின்…

அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதி கட்டுவதுக்காக அயோத்தியில் நிலத்தை ஒதுக்கித் தர உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியின் தனிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கரை உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கியது. இதில் மசூதி கட்டுவதற்கான பணிகளை நிர்வகிக்க இந்திய-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.

அரசு ஒதுக்கிய நிலத்தின் பயன்பாட்டை மாற்ற அனுமதி கோரி அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தில் இந்திய – இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் விண்ணப்பித்தது. இதனால், மசூதி கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், அரசு ஒதுக்கிய நிலத்தின் பயன்பாட்டை மாற்ற ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரும், அயோத்தி கோட்ட ஆணையருமான கௌரவ் தயாள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசிடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றன. திங்கள்கிழமை முதல் இவ்விவகாரம் கவனத்தில் கொண்டு ஒரு வாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.