கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்!

தமிழ்நாடு – கேரளா இடையே செங்கோட்டை வழியாக கோடை கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழ்நாட்டில் பல இடங்களில் 100…

தமிழ்நாடு – கேரளா இடையே செங்கோட்டை வழியாக கோடை கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி வருகிறது.  இதனிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும்  அளிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து,  குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் விரும்புகின்றனர்.  பலரும் சுற்றுலா செல்ல துவங்கி விட்டனர்.   இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில் தாம்பரத்திலிருந்து – கேரள மாநிலம் கொச்சுவேலிக்கும்,  மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து – தாம்பரத்திற்கும் வாரம் இருமுறை கோடைகால ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தக் கோடை கால சிறப்பு ரயிலானது வரும் 16-ம் தேதி முதல் ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமையும் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு,  மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

அதேபோல் வருகிற 17-ஆம் தேதியில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் கொச்சுவேலியில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.