“ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் கடினமாக இருக்கப்போகிறது” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

ராஜஸ்தான் அணியுடனான போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம்…

ராஜஸ்தான் அணியுடனான போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணியின் ஆட்டக்காரர்கள் சாய் சுதர்ஷன் – சுப்மன் கில் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது :

“குஜராத் அணியினர் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அத்தகைய நிலையில், ரன்கள் அதிகம் விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எங்களுடைய அடுத்த போட்டி, பகல் நேரத்தில் சென்னையில் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் போன்ற வலிமையான அணியுடன் மோத உள்ளதால், அந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப்போகிறது”

இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.