தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி, 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று 94-வது ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக களிமேடு பகுதியில் தேர் சென்றபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து. இதனால், தேரில் பற்றிய தீயில் சிக்கிய 10 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
https://twitter.com/news7tamil/status/1519120954655330304
அண்மைச் செய்தி: பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி
படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://twitter.com/news7tamil/status/1519110626458890241
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







