மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம்: மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உத்தரவு

மூவலூர் இராமமிர்தம் திட்டத்தின்கீழ், பள்ளி மாணவியருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்க சான்றிதழ்களைப் பெறுமாறு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும்…

மூவலூர் இராமமிர்தம் திட்டத்தின்கீழ், பள்ளி மாணவியருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்க சான்றிதழ்களைப் பெறுமாறு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1 ,000 வழங்கும் திட்டத்துக்குத் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை பெற ஆணையிடப்பட்டுள்ளது

முதலாம் ஆண்டைத் தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற வேண்டும். சமூகந லத் துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களைப் பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும். கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படும் ஜூலை 15ஆம் தேதி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க ஏதுவாக உயர் கல்வித் துறை பணிகளைத் தொடங்கியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.