கேரளாவில் குரங்கு காய்ச்சல்- பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், வயநாட் மாவட்டம் திருநெல்லி கிராம பஞ்சாயத்தில் உள்ள பனவல்லி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த 24 வயதான இளைஞருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பருவகால காய்ச்சலாக கருதப்படும் குரங்கு காய்ச்சல் பொதுவாக நாட்டின் தெற்குப் பகுதியில் பரவக்கூடியது குரங்குகள் மூலம் பரவக்கூடிய இந்த தொற்று குறித்து ஏற்கனவே உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கேரளாவில் நடப்பு ஆண்டில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது இதுவே முதல் முறை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி மானந்தவாடி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், குரங்கு காய்ச்சலால் வேறு யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சகீனா தெரிவித்துள்ளார்.