முக்கியச் செய்திகள் தமிழகம்

தேனி ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸ் விசாரணை

தேனி மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இரண்டு கைபேசி எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம் அனுப்பும்படி கேட்கப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்வதுபோல போலி ஒதுக்கீடு ஆவணத்தை அனுப்பியும் பணம் கேட்கப்படுகிறது. தேனி மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக 94441-72000 என்கிற என்னை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். தவறான எண்களில் இருந்து வாட்ஸ் ஆஃப் தகவல் வந்தாம் மக்கள் நம்ப வேண்டாம். மோசடியில் ஈடட்டவர்கள் மீது காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோரின் பெயரில் இந்த கும்பல் பண மோசடியில் ஈடுபட முயன்றது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடக்கட்டும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி – அரசு பச்சைக் கொடி

EZHILARASAN D

சிகரத்தைத் தொட்ட கொரோனா!

Halley Karthik

நேரடியாக பொறியியல் கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி தகவல்

EZHILARASAN D