100வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமரின் தாயார்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் 100வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் வசிக்கும் தனது தாயின் 100வது பிறந்த நாளையொட்டி, இன்று காலை தனது…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் 100வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் வசிக்கும் தனது தாயின் 100வது பிறந்த நாளையொட்டி, இன்று காலை தனது இல்லத்துக்கு நேரில் சென்று தாயின் கால்களுக்கு பாதபூஜை செய்து, ஆசி பெற்றார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மோடியின் தாயாருக்கு ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1538133241860804608?t=b-vwtd98oA_6KBLN_rq81Q&s=08

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே தங்கள் தாயார் இன்று தமது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாய் மீதான தங்கள் பாசத்தை நான் நன்கறிவேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் எனது தாயாரின் உடல்நலன் குறித்து தாங்கள் விசாரிப்பதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். இந்தச் சிறப்பான நாளில், தங்கள் தாயாருக்கும், தங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.