இயக்குநர் பொன்ராம் பெயரில் பணமோசடி

தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குத் தொடங்கி, சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் பிரபல இயக்குநர் பொன் ராம் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா உட்பட பலர் நடித்த வருத்தப்படாத…

தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குத் தொடங்கி, சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் பிரபல இயக்குநர் பொன் ராம் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா உட்பட பலர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினிமுருகன், சீமராஜா உட்பட சில படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இப்போது சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்ற படத்தை இயக்கி யுள்ளார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், இவர் பெயரில் சமூக வலைதளங்களில் போலியாக கணக்குத் தொடங்கி சிலர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பிரபலங்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி பணம் கேட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இயக்குநர் பொன்ராம் பெயரிலும் போலி கணக்குத் தொடங்கி சிலர் பணம் கேட்டு வந்துள்ளனர்.

இதுபற்றி பொன்ராம் ட்விட்டரில், என் பெயரில், போலியாக பேஸ்புக் அக்கவுண்ட் தொடங் கப்பட்டு சில பேரிடம் பணம் கேட்பதாக அறிந்தேன். யாரும் நம்ப வேண்டாம். Friend Request வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம். பரிச்சயமான விவரமின்றி வரும் அழைப்புகளை ஏற்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.