பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி!

நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து,  பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நரேந்திர மோடி.  நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்…

நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து,  பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நரேந்திர மோடி. 

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.  இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  இந்நிலையில் டெல்லியில் இன்று மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  இதனை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித்ஷா வழிமொழிந்தார்.

தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி.  அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றதை தொடர்ந்து,  முரளி மனோகர் ஜோஷியின் இல்லத்திற்கும் சென்று அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றார் நரேந்திர மோடி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.