நீலகிரி : பள்ளத்தாக்கில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட பெண்

நீலகிரி அருகே பெதாட்டபெட்டா பள்ளத்தில் பெண் ஒருவர் குதித்து உயிரை மாய்த்து கொண்ட வீடியே வைரலாக பரவி வருகிறது.   நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு ஊட்டி, குன்னூர் மற்றும்…

நீலகிரி அருகே பெதாட்டபெட்டா பள்ளத்தில் பெண் ஒருவர் குதித்து உயிரை மாய்த்து கொண்ட வீடியே வைரலாக பரவி வருகிறது.

 

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இடங்களை தவித்து, மலை சார்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்க கூடிய இடமாக அமைந்துள்ளது.

 

சனி, ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்துள்ளது. பள்ளத்தாக்கு பதிகளையும், மலை சார்ந்த இடங்களையும் பார்வையிடும் அவர்கள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனையில் உள்ள பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத நேரம் பள்ளத்தாக்கில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார். இதனால் சக சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பள்ளத்தாக்கில் குதித்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணுக்கு 60 வயது இருக்கும் என்றும் அந்த பெண் பெயர் லீலாவதி என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பெண் பள்ளத்தாக்கில் குதித்த போது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.