முக்கியச் செய்திகள் தமிழகம்

விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தின் தலைப்பு செய்தியாகிவிட்டது. இன்றுகூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் அதற்கு முன்பு நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், சுற்றுச்சூழல் ஆர்வலர் பத்மப்ரியா நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்த முருகானந்தம் உட்பட 7 நிர்வாகிகள் என கடந்த சில நாட்களாகவே மநீமாவிலிருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

விலகிய நிர்வாகிகள் அனைவரும் மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்த நிலையில் பார்க்கப்பட்டவர்கள். விலகிய ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுடைய மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளவர்கள். அதன்காரணமாகதான் கமல்ஹாசன் சென்ற இடமெல்லாம் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

விலகிய நிர்வாகிகள் அனைவரும் கமல்ஹாசன் மீது அதிகம் பற்றுக்கொண்டவர்கள் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் கட்சியிலிருந்து விலகிய பிறகு அவர்கள் சொன்ன காரணம்தான் மக்களை ஆச்சரியப்படுத்தியது.

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய நிர்வாகிகள் பெரும்பாலும் கட்சியில் ஜனநாயகம் இல்லை சர்வாதிகார போக்கு உள்ளது, கமல்ஹாசனுக்கு ஆலோசனை கூறுபவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள்.

இன்று விலகிய மநீமாவின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கூட ““சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் போனதற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும் அவர்களின் தவறான வழிநடத்தலுமே காரணம் என தெரிவித்துள்ளார்.

தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்திருக்கிற அரசியலை விட மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள சி.கே.குமரவேல் மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியாக விலகுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இத்தனை நிர்வாகிகள் விலகிய உள்ளபோதும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தற்போதுவரை ஒரு வார்த்தைகூட தெரிவிக்காமல் உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் கட்சியின் சார்பில் நடத்தப்படும் கொரோனா நிவாரண உதவி, தமிழக அரசிடம் கோரிக்கை, கேரள முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பினராயி விஜயனுக்கு வாழ்த்து, எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு இரங்கல் என நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கருத்து தெரிவித்துள்ளாரே தவிர தன் கட்சியில் அன்றாட நிகழ்வாகிபோன நிர்வாகிகள் விலகள் குறித்து கமல்ஹாசன் இதுவரை கருத்தும் இடம்பெறவில்லை.

துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகியபோது மட்டும் கட்சியின் இளைஞரின் மாநில செயலாளர் சினேகன், நிர்வாககுழு உறுப்பினர் தங்கவேலு, தலைமை நிலைய பொதுச் செயலாளர் சந்தோஷ்பாவு ஐஏஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் கட்சி தலைவர் என்ற அடிப்படையில் கமல்ஹாசன் இதுவரை எந்தவொரு கருத்து தெரிவிக்காமல் கள்ள மௌனத்தில் உள்ளார். கமல்ஹாசனின் இந்த மௌனம் எதற்காக? என்று அவர் நிர்வாகிகள் விலகல் குறித்து பேசுவார்? தன் கட்சியில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து மக்களிடம் விலக்க எப்போது நிரூபர்கள் சந்திப்பார்?என கேள்விகள் எழுந்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்து விலகும் நபர் யாராக இருக்கும் என்ற துணைக்கேள்வி எழுகிறது?

Advertisement:

Related posts

இந்திய விமானங்களுக்கு இலங்கையில் தடை!

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டறிய அரசுக்கு உயர்நீதிமன்றம் சொன்ன யோசனை!

Ezhilarasan

எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: வெள்ளையன் அறிவிப்பு

Ezhilarasan