செய்திகள்

எம்ஏல்ஏக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன்

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அங்கேயே தீர்வு காணும் வகையிலான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்ற பதவியே தேவையில்லை என்றும், நீட் மசோதா, பல்கலை மசோதா, எழுவர் விடுதலை போன்ற சட்ட மசோதாக்களை கிடப்பில் போடும் ஆளுநர் என்ற பதவியே தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து, அவர்களின் பரிந்துரை பெறப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைகளைக் கேட்டு அங்கேயே தீர்வு காணும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும். சட்டமன்ற விடுதிக்குள் சபாநாயகர் அனுமதியின்றி காவல் துறையினர் உள்ளே வரக்கூடாது என்றார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஆளுநர் அரசியல் பேசுகிறார். ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டிற்கு ஆளுநர் எதற்கு? என கேள்வி எழுப்பியதுடன், ஆளுநர் என்ற பதவி நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்

Advertisement:
SHARE

Related posts

பிப். 14ம் தேதியில் நீட் தேர்வுக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங்

Saravana Kumar

“தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்

Niruban Chakkaaravarthi

”பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை”

Saravana Kumar