கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ.

கர்நாடகாவில் ஐடிஐ கல்லூரியில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த எம்எல்ஏ அக்கல்லூரியின் முதல்வரை அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் செயல்பட்டு வரும் நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐடிஐ கல்லூரியில் வளர்ச்சிப் பணிகள்…

கர்நாடகாவில் ஐடிஐ கல்லூரியில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த எம்எல்ஏ அக்கல்லூரியின் முதல்வரை அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் செயல்பட்டு வரும் நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐடிஐ கல்லூரியில் வளர்ச்சிப் பணிகள் முடிந்து புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த திறப்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ எம்.ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டு கல்லூரியை பார்வையிட்டார்.

அப்போது கணினி ஆய்வகத்தைப் பார்வையிட்ட ஸ்ரீனிவாஸ், அங்கு நடந்த பணிகள் குறித்து கல்லூரி முதல்வர் நாகநாத்திடம் கேட்டறிந்தார். அதற்கு கல்லூரி முதல்வர் அளித்த பதிலில் திருப்தியில்லாததால் யாரும் எதிர்பாராத வகையில் எம்எல்ஏ அவரை சக அரசியல்வாதிகள், கல்லூரி ஊழியர்கள் முன்னிலையில் பளார் என அறைந்தார்.

https://twitter.com/SheetalPronamo/status/1539258275929427969

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் எம்எல்ஏவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.