முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றுபெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளை விட, திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதலமைச்சராக, வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார்.

இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்கும் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

மு.க.அழகிரியை புறந்தள்ளி விட்டு திமுக ஆட்சிக்கு வருவது நடக்காத ஒன்று; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

Dhamotharan

இந்தியா: கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா இறப்பு எண்ணிக்கை

Karthick

மக்கள் பணியாளனாக சிறப்பான பங்களிப்பை தமிழகத்திற்கு அளிப்பேன்! – தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி

Saravana