மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் குழு அவரது உடல் நலனை முழுமையாக ஆராய்ந்து, ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சையை பரிந்துரைத்துள்ளது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
ரஜினிகாந்த் நன்றாகத் தேறி வருகிறார். இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்குத் திரும்புவார் என்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ஐ.சி.யூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அவர், மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
Advertisement: