முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாக். பயிற்சியாளர் பதவியில் இருந்து மிஸ்பா, வக்கார் யூனிஸ் திடீர் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் திடீரென விலகியுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திரும்பிய பிறகு பிறகு, சில காலம் ஓய்வில் இருந்தார். பின்னர்
கடந்த 2019 செப்டம்பரில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா நியமிக்கப்பட்டார். அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டு காலம் உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இதே போல, அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸும் பதவி விலகியுள் ளார். டி20 உலகக் கோப்பை போட்டி நெருங்கியுள்ள நிலையில் இருவரும் திடீரென்று பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எஹசான் மணி சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து ரமீஸ் ராஜா புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலை யில், இந்த பதவி விலகல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

SC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா? – சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி

Vandhana

வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சகோதரிகள்!

Niruban Chakkaaravarthi

லாபத்தை அள்ளும் ஹிமாச்சல் செரி!

Vandhana