முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

அடுத்த நாவலுக்காக இந்தியா வருகிறார் சல்மான் ருஷ்டி

தனது அடுத்த நாவலை எழுதுவதற்காக இந்தியா வருகிறேன் என்று பிரபல எழுத்தா ளா் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இதைத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் பிறந்த ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 1988ம் ஆண்டு ‘சாட்டானிக் வொ்ஸஸ்’ (Satanic Verses) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் சர்ச்சை யை ஏற்படுத்தியதை அடுத்து, ஈரானின் தற்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி, அவருக்கு ஃபத்வா பிறப்பித்தார். இதனால், உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பல ஆண்டுகள் பிரிட்டன் பாதுகாப்பில் தலைமறைவாக இருந்தார். அவர் இந்தியா திரும்பி னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தியா வருவதையும் தவிர்த்தார்.

கடைசியாக, 1981-ம் ஆண்டு அவருடைய ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு தீபா மேத்தா எடுத்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக இந்தியா வந்திருந்தார்.
அதன் பிறகு இந்தியாவுக்கு வரவில்லை. இந்நிலையில், அடுத்த நாவலை இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு எழுத இருப்பதாகவும் அதற்காக இந்தியா வர இருப்பதாகவும் ருஷ்டி தெரிவித்துள்ளார்.

மத எதிர்ப்புகளும் பாதுக்காப்பு சிக்கல்களுமே தனது இந்திய பயணத்தைக் கடினமாக்கியது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 10 வருடங்களில் மேற்கத்திய நாவல்களை அதிகம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ள ருஷ்டி, அவை அமெரிக்காவை கதைக்களமாகக் கொண்ட வை என்றும் சில பிரிட்டனைச் சோ்ந்தவை என்றும் தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஷ்டி இதுவரை 12 நாவல்களும் பல கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள் ளார்.

Advertisement:
SHARE

Related posts

தொட்டில்கட்டி 8 கி.மீ தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணி

Gayathri Venkatesan

ஆகாயத்திலும் இனி அலுவலக வேலை செய்யலாம்!

எல்.ரேணுகாதேவி

பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

Halley karthi