ராஜபக்ச சகோதரர்கள் கமிஷன் கேட்டனர் – விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவைச் சேர்ந்த தயா மோகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் இருந்த தயா மோகன் பேட்டி நியூஸ்7 தமிழின் துணை ஆசிரியர் ஜோ மகேஸ்வரனுக்கு பிரத்யேக நேர்காணலில் அளித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட  கடனை அடைக்க தமிழர்கள் நிதி திரட்டி கொடுக்க முன்வந்த…

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் இருந்த தயா மோகன் பேட்டி நியூஸ்7 தமிழின் துணை ஆசிரியர் ஜோ மகேஸ்வரனுக்கு பிரத்யேக நேர்காணலில் அளித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட  கடனை அடைக்க தமிழர்கள் நிதி திரட்டி கொடுக்க முன்வந்த போது  ராஜபக்ச சகோதரர்கள் 30 சதவீதம் கமிஷன் கேட்டனர் என  விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் இருந்த தயா மோகன் பேட்டி நியூஸ்7 தமிழுக்கு அளித்த் பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 7 தமிழின் துணை ஆசிரியர் ஜோ மகேஸ்வரனிடம்  விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் இருந்த தயா மோகன்  பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் தயா மோகன் தெரிவித்ததாவது..

” 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை நாங்கள் அறிவித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டோம்.  2009 லிருந்து பழ.நெடுமாறன் போன்றோர் ஆரம்பத்திலிருந்தே தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏற்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என சொல்லி வந்தனர். அப்போதெல்லாம் நாங்கள் அமைதியாக கடந்து விட்டோம்.

ஆனால் தற்போது நாங்கள் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிப்பதற்கான காரணம் பிரபாகரன் மக்களுக்காக செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதனால்தான் மீண்டும் பிரபாகரனின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.

இலங்கையின் முழு கடனையும் அடைக்க, தமிழர்கள் திரட்டி கொடுக்க இருந்த நிலையில் நிதியை பெற ராஜபக்ச சகோதரர்கள் 30 சதவீதம் கமிஷன் கேட்டனர்.” என விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் இருந்த தயா மோகன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் இருந்த தயா மோகன் பேட்டி நியூஸ் 7 தமிழின் துணை ஆசிரியர் ஜோ மகேஸ்வரனுக்கு  அளித்த பிரத்யேக நேர்காணலில் காண…..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.