உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு மூலம் தேனாறும் பாலாறும் தமிழ்நாட்டில் ஓடபோகின்றதா என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகரில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலலிதா சிலைக்கு, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உதயநிதி, மு.க.அழகிரி சந்திப்பு மூலம், தமிழ்நாட்டில் பாலாறு தேனாறு ஏதேனும் ஓடபோகின்றதா? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அழகிரி சந்திப்பு மூலம் என்ன நடக்கப்போகின்றது. ஒன்றுமே இல்லை.
விளையாட்டுதுறை அமைச்சராக உள்ள உதயநிதி, தீராத விளையாட்டு பிள்ளையாக உள்ளார். நேரு ஸ்டேடியத்தில் சிந்தடிக் டிராக் அமைப்பதற்கு 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்துள்ளளனர். பொறுப்பாக அவர் செயல்படவில்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல மு.க.ஸ்டாலின், உதயநிதி எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறி வருகின்றார்.
கருணாநிதியை கலைஞர் என ஏன் குறிப்பிடுகின்றோம். அவர் நடிக்க கூடியவர். அவர்கள்
குடும்பமே நடிப்பவர்கள் தான். எதிர்பார்த்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கடன்சுமை அதிகரிப்பு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, இப்படி அடுக்கில் கொண்டே போகலாம். பாலமேடு ஜல்லிகட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜனுக்கு குறைந்த நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆளுநர் உரையின் போது எதிர்த்து தரக்குறைவாக திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி. எதிர்காலத்தில் இதுபோல நடக்ககூடாது. இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றதிற்கும் தேர்தல் வந்தால், திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்களும் திமுகவினருமே தயாராக உள்ளனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வீண் வரி செலவுகளை குறைக்கமுடியும் என்பதால் இது மோடிஜியின் கனவு திட்டம். அவர் வல்லரசு நாடாக மாற்ற நினைக்கின்றார். மதுரையில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை பெரியப்பா என சொல்லும் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.