ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம் – ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய 3 பேரும் இணைந்து ஒன்றுபட்டு தனிக்கட்சி தொடங்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய 3 பேரும் இணைந்து ஒன்றுபட்டு தனிக்கட்சி தொடங்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: சசிகலா ஆயிரம் கருத்து சொல்லலாம், அதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா மூன்று பேரும் ஒன்றுபட்டு தனிக்கட்சி தொடங்கி, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம். மூவரும் ஒன்றுபட்டால் அவர்களுக்குதான் வாழ்வு. தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் எந்த வாழ்வும் இல்லை. அதிமுகவில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம். அதிமுக குறித்து சசிகலா தேவையில்லாத கருத்து கூற வேண்டாம்.

நானும் இருக்கிறேன் என காண்பித்துக் கொள்வதுதான் ஓ.பன்னீர் செல்வம் பேசிவருகிறார். ஓ.பன்னீர் செல்வம் பொறுத்தவரை தன்னுடைய குடும்பம் வாழவேண்டும். தன்னுடைய நலனை பார்க்கும் சுயநலவாதி.

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ நல்ல விஷயம், செலவுகள் தவிர்க்கப்படும். 2024-இல் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ வந்தால் மக்கள் விருப்பபடி அதிமுக ஆட்சி அமைக்கும். ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திமுகவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் அழகிரியை சந்தித்தது குடும்ப பாசம்தான். இந்த குடும்ப பாசம் பின்னாளில் முட்டி மோதி வீதிக்கு வரும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.