வடஇந்தியாவை சேர்ந்தவர்களுக்கும் திமுக ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை தங்க சாலை பகுதியில் ஜெயின் சங்கத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும் திமுக ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், முதலமைச்சரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் அனைவரும் பயன்பெற்று வருவதாக கூறினார். மேலும், பொதுமக்களுக்கு ஆற்றிவரும் தொடர் செயல்பாடுகள் மற்றும் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டங்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஒரு பத்திரிகை நிறுவனம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கிவுள்ளதாக குறிப்பிட்டார்.







