அழைக்கும் வசதியுடன் புளூடூத் வாட்ச்!

இளைஞர்களை கவரும் வகையிலான ஹெட்போன், இயர்போன், புளூடூத் வாட்ச் ஆகிய எலெக்ட்ரானிக் உபகரணங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது போட் நிறுவனம். இந்த நிறுவனம் நேற்று புளூடூத் மூலம் அழைக்க உதவும் புதிய ரக…

இளைஞர்களை கவரும் வகையிலான ஹெட்போன், இயர்போன், புளூடூத் வாட்ச் ஆகிய எலெக்ட்ரானிக் உபகரணங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது போட் நிறுவனம்.

இந்த நிறுவனம் நேற்று புளூடூத் மூலம் அழைக்க உதவும் புதிய ரக வாட்ச்சை அறிமுகம் செய்தது. AMOLED தொழில்நுட்பம் கொண்ட டிஸ்பிளே உடன், போட் பிரிமியா என்ற பெயரில் புளூடூத் வாட்ச்சை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் உட்புறமாக பொருத்தப்பட்ட ஸ்பீக்கர், ஒரு மைக்ரோபோன், ஒரு மெட்டாலிக் டிசைன் உடன் லெதர் ஸ்டிராப்பும் இணைக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே 1.39 இன்ச் அளவில் 454×454 ரிசொல்யூஷன் உடன் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் அசிஸ்டன்ட்டையும் நேரடியாக அணுக இந்த ஸ்மார்ட்வாட்ச் அனுமதிக்கிறது. கூகுள், சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ் ஆகியவற்றுடன் ஸ்மார்ட்போன் மூலமாக இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கனெக்ட் செய்து கொள்ள முடியும். இதயத்துடிப்பை அறிந்துகொள்ளும் வசதி, SP02 எனப்படும் ஆக்சிஜன் செறிவை அறிந்து கொள்ளும் வசதி, மன அழுத்தத்தை அறிந்துகொள்ளும் வசதி, எத்தனை அடி நடக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி, எவ்வளவு கலோரியை எரித்திருக்கிறோம் மற்றும் எத்தனை தூரம் பயணித்திருக்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ளும் வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் இருக்கிறது.

இதுதவிர தூக்கத்தை கண்காணிக்கும் வசதியும் உள்ளது. அதாவது, நன்றாக தூங்கியிருக்கிறோமா அல்லது ஓரளவுக்கு தூங்கியிருக்கிறோமா என்பதையும் நம்மால் இந்த வாட்ச்சின் துணையுடன் கண்காணிக்க முடியும். கூடைப்பந்து, பேட்மிண்டன், கால்பந்து,  சைக்ளிங் செய்தல், யோகா, டிரெட்மில்லில் ஓடுதல் அல்லது வெறுமனே நடந்தாலோ ஓடினாலோ கூட நம்மால் இந்த வாட்ச்சைப் பயன்படுத்தி கண்காணித்துக் கொள்ள முடியும். நமது ஸ்மார்ட்போனில் பெறப்படும் மெசேஜ்களுக்கான அறிவிப்புகளையும் இந்த போட் வாட்ச்சில் நம்மால் பெற முடியும்.

அத்துடன், இந்த ஸ்மார்ட்வாட்ச்சைப் பயன்படுத்தி உங்கள் போனில் இருந்து புகைப்படங்களையும் எடுக்க முடியும். IP67 தொழில்நுட்பம் இருப்பதால் தூசி, வியர்வை ஆகியவற்றால் இந்த ஸ்மார்ட்வாட்ச் பாதிக்கப்படாது. இந்த டிஸ்பிளே மீது தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சில் உள்ள பேட்டரி 7 நாட்கள் வரை உழைக்கும் திறன் கொண்டது. இத்தனை அற்புதமான வசதிகளைக் கொண்டிருக்கும் போட் பிரிமியா ஸ்மார்ட்வாட்ச்சின் அறிமுக விலை ரூ.3,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் போட் வலைத்தளத்தில் இந்த வாட்ச் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.