ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக விளக்கமளிக்க நாளை ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர சட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 19ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் சட்டமசோதா இயற்றப்பட்டது. அந்த சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலாவதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரம் கேட்டிருந்ததாகவும் ஆனால் அவரை சந்திக்க ஆளுநர் தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க அமைச்சர் ரகுபதிக்கு நாளை காலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரை சந்திக்கும்போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்குவார் என தகவல்கள் கூறுகின்றன.