இந்தியாவில், உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஐதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவர் என 6 பேருக்கு உருமாறிய கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்துள்ளது.