மதுரையில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை ஒத்தக்டையில், வணிகர் நல் சங்கத்தினர் ஆண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடிசைத்து துவக்கி வைத்தார்.
இதில் பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு வகைகளாக பந்தயம் நடைபெற்றது. மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு முதல் பரிசாக ரூ 40,000, இரண்டாவது பரிசாக ரூ 30,000, மூன்றாவது பரிசாக ரூ 20,000 எனவும், சின்ன மாடு எனில் முதல் பரிசாக ரூ 30,000, இரண்டாவது பரிசாக ரூ 20,000, மூன்றாவது பரிசாக ரூ 10,000 வழங்கப்பட்டது.
மதுரை ஒத்தக்கடையிலிருந்து திருவாதவூர் வரை 10 கிலோமீட்டருக்கு இப்பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தயத்தை பார்த்து ரசித்தனர். இதில் வணிகர் நலசங்க பேரவை தலைவர், கே.எஸ்.ரகுபதி, பொதுச் செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் முனீஸ்வரன், நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
-அனகா காளமேகன்






