உலக நாயகன் கமலையும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியையும் இணைத்த, யாரு சாமி நீ என நம்மை வாய் பிளக்க வைக்கும் குகை குறித்த சில சுவாரஷ்ய தகவல்களை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
1991ம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்தில் கமல், கதாநாயகி ரோஷிணியை ஒரு குகைக்கு கடத்தி கொண்டு செல்வார், அதற்கு ஒரு பாடலும் உண்டு பின்னர் அந்த குகையும் பிரமபலமானது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் பார்த்து இருப்போம். அதில் பவானி கஷாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி ஒரு வசனம் கூறியிருப்பார். அது என்ன என்றால் “என் சரக்கு எனக்கு கிடைச்சா போதும், உன்னோட அரசாங்கம் எனக்கு தேவை இல்ல, என்னோட கவர்ன்மெண்டை என்னால உருவாக்கமுடியும்” என சொல்லி இருப்பார். அந்த வசனதிற்கு ஏற்றவாரு இங்கு ஒரு குகை தனக்கான சொந்த ஆறு, காடு இவ்வளவு ஏன், தனக்கான சொந்தமாக ஒரு வானிலையே வச்சி இருக்கு. ஆம், அந்த குகை தனக்கான ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளது…
வியட்நாமில் இருக்கும் மலைதொடர்களில் இருக்கும் இந்த குகையின் பெயர் ஹாங் சோன் தூங்க் (Hang Sơn Đoòng). இது இயற்கையாகவே அமைந்த உலகின் மிகப் பெரிய சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை குகையாகும். 150 தனித்தனி குகைகளின் தொடராக உள்ள இந்த குகை 5 கிலோ மீட்டர் நீளமும், 200 மீட்டர் உயரமும், 150 மீட்டர் அகலமும் கொண்டது. தற்போது போங் நா-கே பாங் தேசியப் பூங்காவில் பராமரிக்கபட்டு வருகிறது. காடுகள், பாலைவனம் இல்லாத சோலைவனம், தித்திக்கும் நீர் ஓடும், தனக்கென்ற சொந்தமான ஒரு காடு, வானிலை என ஒரு சுற்றுலா தலத்திற்கு தேவையான எல்லாமே இந்த குகையில் உள்ளது.
1991-ம் ஆண்டில் அந்த பகுதியில் வசிக்கும் Hồ Khanh என்பவர் தனது தினசரி தேவைகளுக்காக AGARWOOD என கூறப்படும் விலைமதிப்பு மிக்க மரத்தை சேகரிக்க சென்ற பொழுது, நீரோட்டத்தின் சத்தம் உள்ளடக்கிய வித்தியாசமான சத்தமும், தோற்றமும் தென்படுவதை உணர்ந்து அருகே சென்று இந்த குகையினை கண்டறிந்தார்.
இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், இந்த குகையனது 5 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானதாகவும், 200 மீட்டர் உயரமாகவும் 150 மீட்டர் அகலம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அறிய வகையான ஸ்டலாக்மைட்ஸ் (stalagmites) எனப்படும் தானாக உருவான பாறைகள் இங்கு அதிகம் காணப்படுகிறது. முன்னாரே கூறியது போல் இந்த குகை தனக்கான ஆறு, காடு, சொந்தமாக ஒரு வானிலை மற்றும் தனக்கே உரிய அறிய வகை மூளிகைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– ஆண்ட்ரு, நியூஸ் 7 தமிழ்










