மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள்: அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்!

மரக்காணத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளை அமைச்சர் மஸ்தான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து பல கிராமங்களுக்கு செல்ல இதுவரையில் பேருந்து வசதி நேரடியாக இல்லை இதனால் கிராமப்…

மரக்காணத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளை அமைச்சர் மஸ்தான் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து பல கிராமங்களுக்கு செல்ல இதுவரையில் பேருந்து வசதி நேரடியாக இல்லை இதனால் கிராமப் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு உட்பட்டு பயணம் செய்து வந்தனர். மேலும், மகளிர்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து மரக்காணத்திலிருந்து கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்படம் ஓவி பேர் அசப்பூர், முருக்கேரி ஆகிய வழிதடங்களில் ஒரு பேருந்தும், மரக்காணம் அனுமந்தை, கூனி மேடு, கீழ் புத்துப்பட்டு இந்த வழித்தடத்தில் மற்றொரு பேருந்து சேவைகளையும் அமைச்சர் மஸ்தான் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை துவக்கி வைத்து அனைத்து கிராம பொதுமக்களும் பயன்பெறும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்து தந்த அமைச்சர் மஸ்தானுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்காணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பழம் பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட சத்துப் பொருட்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

—–அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.