பெரம்பலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21 கிலோ மீட்டர் ஓடி தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தானை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று முதல் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்திருந்தபோது, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரசலூர், விசுவக்குடி உட்பட பல்வேறு கிராமங்களைச் சுற்றி அதிகாலை 5 மணியளவில் மாரத்தானை தொடங்கி 21.கி.மீ. தூரம் ஓடி, தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தன் மீதும் ஓட்டப்பந்தயத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் என்பத் குறிப்பிடத்தக்கது. அவர் பல்வேறு மாரத்தான் போட்டிகளை நடந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








