திராவிடத்தின் புதிய சொல் ஆட்சிதான் முதல்வர். அவர் சொன்னார் இவர் சொன்னார் என அப்படியே நம்பாமல், ஏன்? எப்படி? என கேள்வி எழுப்பியது திராவிட மாடல். வீட்டுக்கு ஒரு பட்டதாரியை கொண்டு வருவது திராவிட மாடல் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளிக் கல்வித் துறையில் 36,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுவரை இதுபோன்ற ஒரு பெருந்தொகையை தமிழகத்தில் இதற்கு முன் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கியதில்லை. முதல்வர் தமிழக மாணவர்களுக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தங்களது பகுதிகளில் கல்லூரி வேண்டும் என கேட்கும் அளவிற்கு இன்று தமிழகம் இந்த ஆட்சியால் மாறியிருக்கிறது.
எது திராவிட மாடல்?
திராவிடத்தின் புதிய சொல் ஆட்சிதான் முதல்வர். அவர் சொன்னார் இவர் சொன்னார் என அப்படியே நம்பாமல், ஏன்? எப்படி? என கேள்வி எழுப்பியது திராவிட மாடல். வீட்டுக்கு ஒரு பட்டதாரியை கொண்டு வருவது திராவிட மாடல். ஆலய பிரவேசம் செய்தது திராவிட மாடல். அரவாணி என அழைக்கப்பட்ட சமூகத்தை, அழகு தமிழ் திருநங்கை என அழைத்து அரவணைத்தது திராவிட மாடல். ஊனமுற்றோர்களை, மாற்றுத் திறனாளி என மாற்றியது திராவிட மாடல். மாநிலம் முழுவதும் மின்சார வசதியை ஏற்படுத்தியது திராவிட மாடல்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், மாநில உரிமை என முதல்வர் அறிவித்திருப்பது திராவிட மாடல். பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்பது திராவிட மாடல். அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்த முதல்வரின் செயல் திராவிட மாடல்.
எனக்கு ஒருமுறை சாலை விபத்து நேர்ந்தது. என் தலையில் இருக்கும் தழும்பு எனக்கு விபத்து நேர்ந்தபோது ஆனதுதான். எனது கால்கள் 6 துண்டாக ஆனது. அந்த நேரத்தில் என்னை மருத்துவர் என்னால் வேகமாக கூட நடக்க இயலாது என தெரிவித்தனர். ஆனால் நான் 2 வருடங்கள் கழித்து எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முன்பு பத்மாசனம் போட்டு காண்பித்தேன். எப்படி என கேட்டார், பயிற்சி தான் என கூறினேன்.
2 வருடங்களில் 25 மாரத்தான்களில் ஓடி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளேன். இதுவரை 12 நாடுகளின் மாரத்தான்களில் பங்கேற்றுள்ளேன். எனக்கு இந்த ஒரு வருடத்தில், 36 மாநிலங்களிலும் ஓட வேண்டும் என ஆசை. கொரோனா நேரத்தில் எனது வீட்டின் மேல் 8 போட்டு, கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேல் ஓடி ஆசிய சாதனை படித்துள்ளேன். இவைகளெல்லாம் நான் சொல்ல காரணம், மாணவர்களாகிய உங்களுக்கு ஊக்கமளிக்கதான். நடக்கவே முடியாது என மருத்துவர் அறிவுறுத்தியும், நான் ஓடி காட்டினேன். முயற்சி மற்றும் பயிற்சியைத் தாண்டி எதுவுமே இல்லை என்றார்.