அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் 2 முறை ரத்து

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சா் துரைமுருகன் இன்று காலை 9.50 மணிக்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை…

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சா் துரைமுருகன் இன்று காலை 9.50 மணிக்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமான நிலையம் வந்தாா். அவருடைய விசாவில் பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாா்.

அதன்பின்பு அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்னையை சரி செய்து, புதிய விசா வாங்கிவிட்டு இன்று மாலை 6.50 மணிக்கு  துபாய் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது. தொடர்ந்து அவரும், இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். ஏா் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அமைச்சரை வரவேற்று விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனா். அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து, விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா்.

ஆனால் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமைச்சா் துரைமுருகன் ஏா் இந்தியா அதிகாரிகளை அழைத்தாா். நான் இன்று பயணம் செய்ய விரும்பவில்லை எனக் கூறி தனது பயணத்தை ரத்து செய்வதாக தெரிவித்தார். அதிகாரிகளும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய பயணத்தை ரத்து செய்தனர். பின்பு அமைச்சா் துரைமுருகன் விமானத்திலிருந்து இறங்கி அவருடைய காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாா். இதனால் ஏா் இந்தியா விமானம் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 7 மணிக்கு புறப்பட்டு சென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.