துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள்.!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளான நிலா தேசிய அளவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவரது மகள் தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல்…

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளான நிலா தேசிய அளவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவரது மகள் தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் 66வது தேசிய  துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்த   போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டைச் நிலா என்கிற போட்டியாளார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  இவர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளாவார்.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிட்டுள்ளதாவது..

என் மகள் நிலா ராஜா பாலு 66வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்காக ஜூனியர் மகளிர் பிரிவில் தேசிய அளவில் தங்கத்தை வென்றார்.  எனது தனது மாநிலத்திற்காக தொடர்ந்து இரண்டு தங்கம் வென்றுள்ளார். இது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.