கடவுள் பாதி மிருகம் பாதி: வெளியானது ஆளவந்தான் லிரிக்கல் வீடியோ!.. இணையத்தில் வைரல்…

ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி மிருகம் பாதி பாடல்  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ்.…

ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி மிருகம் பாதி பாடல்  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆளவந்தான் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ். தானு பதில் அளித்திருந்தார். அப்போது, படத்தை ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அதன்படி வரும் டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் திரைப்படம் உலகம் முழுவதும் நிறைய மாற்றங்களுடன் புது புது பொலிவுடனும் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் போடப்பட்டு இருக்கின்றது. அதனை முன்னிட்டு ஸ்பெஷல் version பாடல் வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.