அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவின் அரசியல் பின்னணி குறித்து பார்க்கலாம்…
- திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவின் மகன் டிஆர்பி ராஜா.
- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியில் இருந்து, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1976 ஆம் ஆண்டு ஜூலை 12-ல், பிறந்த டிஆர்பி ராஜா, சென்னை கிறிஸ்தவ பள்ளி, லயோலா கல்லூரி, சென்னை பல்கலைகழகத்தில் பயின்றவர்.
- உளவியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்திய அனுபவம் கொண்டவர் டிஆர்பி ராஜா.
இதையும் படியுங்கள் : இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- திமுக-வின் அயல்நாடு வாழ் தமிழர் பிரிவின் முதல் செயலாளராக இருந்த டிஆர்பி ராஜா, தற்போது திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார்.
- சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும், பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராகவும் டிஆர்பி ராஜா இருந்துள்ளார்.
- தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும் உள்ள டிஆர்பி ராஜா அமைச்சராகியுள்ளார்.








