அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வயிறு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வயிறு ஒவ்வாமை காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வயிறு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வயிறு ஒவ்வாமை காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுக்க அனைத்து தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், தொடர் சுற்றுப்பயணத்தின் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அதன் காரணமாக லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர், நாளை வீட்டிற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றுகூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடதக்கது. நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அமைச்சர் ஒருவர் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.