கார் மீது மினி லாரி மோதி விபத்து – பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

பரமக்குடி அருகே கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் தனது மனைவி மகள், மகன் ஆகியோருடன் குற்றாலம் செல்வதற்கு வாடகை காரில் சென்றுள்ளார். காரை காளிஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். ராமநாதபுரம் – மதுரை நான்கு வழிச்சாலையில் பரமக்குடி அருகே நென்மேனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் கோவிந்தராஜுவின் மனைவி யமுனா, மகள் ரூபினி, கார் ஓட்டுநர் காளீஸ்வரர் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் இரண்டு வாகனங்களில் பயணித்த நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.