மனதில் குரல் நிகழ்ச்சி மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழச்சியை பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கேட்டு மகிழந்தனர். அந்த வகையில், மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உடனுடன் பிரதமர் மோடியின் உரையை கேட்டறிந்தார்.
அதேபோல டெல்லியில் கௌதம் கம்பீரும் பிரதமர் உரை பாஜக நிர்வாகிகளுடன் கேட்டறிந்தனர். மேலும் லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அதிகாரிகளுடன் பிரதமர் மோடியின் 100வது மனதில் குரல் நிகழ்ச்சியை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து 100வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இது ஒரு நிகழ்ச்சி என்பதை தாண்டி, எனக்கான நம்பிக்கை மற்றும் ஆன்மீக பயணமாகவே கருதுகிறேன். மனதின் குரல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் பொது இயக்கங்களாக மாறியுள்ளது. மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறை கருத்துக்களை கொண்டு செல்வதற்கான மிகச்சிறந்த வழித்தடமாக மனதின் குரல் நிகழ்ச்சி இருந்ததாக தெரிவித்தார்.
மேலும் மனதின் குரல் நிகழ்ச்சி மக்களின் நல்ல செயல்களை கொண்டாடக் கூடிய இடமாக இருக்கிறது என்றும், சாமானிய மக்களுடன் இணைவதற்கான ஒரு வழியை மனதின் குரல் நிகழ்ச்சி எனக்கு அளித்தது எனவும் கூறினார். ஒவ்வொரு முறை பேசும்போது நாட்டு மக்களிடம் இருந்து விலகாமல் உடனிருப்பது போல் எண்ணம் உள்ளது எனக்கூறிய அவர், 100-வது நிகழ்ச்சியை எட்டியதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பிரதமர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








