வங்கதேசத்தில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.0 ஆக பதிவு.!

வங்கதேசத்தில் இன்று ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகியுள்ளது. தேசிய நில அதிவு மையம்  தகவலின் படி  காலை 11.49 மணியளவில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.04 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

 

வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது மேகாலயாவின் வங்கதேச எல்லைக்கு அருகே ஏற்பட்டது. இருப்பினும், இதனால் மேகாலயாவில் எந்தவித சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.