எம்ஜிஆர் கூட 3வது அணியாக வந்து வெற்றிபெற்றவர் தான் என கோவை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றிபெற தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், “நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என எனது தந்தை கனவு கண்டார். அந்த கனவை நிறைவேற்றும் வகையில் மக்கள் நீதி மய்யத்தில் ஐஏஎஸ் படித்த அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 3வது அணி வென்றதில்லை என எதிரணியினர் கூறிவருகின்றனர். ஆனால், எம்.ஜி.ஆர் கூட 3வது அணியாக வந்து வெற்றிபெற்றவர் தான்” என தெரிவித்தார்.







