கோயம்பேடு-விமானநிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

கோயம்பேடு-சென்னை விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரா ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் பிரதான போக்குவரத்து சாதனங்களில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்றாக விளங்குகிறது. பரபரப்பான சென்னை வாழ்க்கையில் டிராபிக்…

கோயம்பேடு-சென்னை விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரா ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பிரதான போக்குவரத்து சாதனங்களில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்றாக விளங்குகிறது. பரபரப்பான சென்னை வாழ்க்கையில் டிராபிக் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ள ஒன்றாக உள்ளது. மேலும், சென்னையில் மழைக்காலங்களில் மக்களின் பிராதன போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் திகழ்கிறது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் விமான நிலைய மார்க்கத்தில் உள்ள மெட்ரோ ரயிலின் மின்கேபிளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில்நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கோயம்பேடு- சென்னை விமான நிலையம் வரை உள்ள மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈக்காட்டு-அசோக் பில்லர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போதிய மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்துள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.