முக்கியச் செய்திகள் தமிழகம்

மெட்ரோ; அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் (2022) ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 81 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்தனர். ஆனால், பிப்ரவரி மாதத்தில் 1.13 லட்சம் பேர் பயணித்தனர். அதேபோல், மார்ச் மாதத்தில் 1.43 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 1.51 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.59 லட்சம் பேரும் மெட்ரோ ரயிலில் பயணித்தார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொதுவாக வார விடுமுறை நாட்களில் கடந்த ஆண்டில் (2021) லட்சத்திற்கும் குறைவாகவே பயணிகள் பயணித்து வந்தார்கள். இது கணிசமாக உயர்ந்து நடப்பாண்டு முதல் வார விடுமுறை நாட்களிலும் 1.3 லட்சம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து வருகிறார்கள்.

அண்மைச் செய்தி: ‘10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த அஞ்சல் துறை அதிகாரி; பரிதவித்த பெண்’

மெட்ரோ ரயில் பயணிகள் தங்களது குறைகளை மெட்ரோ ரயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துவருகிறார்கள். அவர்களது குறைகளையும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து நிறைவேற்றி வருகிறார்கள்.

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே 6 வழித்தடங்களில் 12 சிற்றுந்துகளை இயக்கி வருகிறது. இதனை விரிவு படுத்தும் வகையில் மேலும் 5 வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram