தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை – அமைச்சர்

தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் 100 கிலோ வாட் திறன்கொண்ட மின்மாற்றியை…

தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் 100 கிலோ வாட் திறன்கொண்ட மின்மாற்றியை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் இதுவரை டெங்கு நோய் பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 495 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2017ம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு நான்கில் ஒரு மடங்கு உள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு என தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.” என்று கூறினார். மேலும்,

“தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவிற்கு விரைவில் புதிய ஆளுநர் சட்ட ஆலோசனை பெற்று ஒப்புதல் கொடுப்பார், அதன் பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதேபோன்று தமிழகத்தில் இதுவரை 71% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 65 இலட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் நாளை 4 இடங்களில் இந்த சேவை தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் இதுவரை புதிய வகை A.Y.4.2 கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவி உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.