தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூா், சேலம், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்தமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்…

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூா், சேலம், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்தமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம் புத்தூா், சேலம், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, நீலகிரி, கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா், பெரம்பலூா், அரியலூா் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும் என்றும் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையும் எனவும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.