டி-20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றால் இவ்வளவு கோடியா?

டிட்-20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றால், பரிசாக வழங்கப்படும் தொகை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. டி-20 உலகக் கோப்பைப் போட்டி கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்…

டிட்-20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றால், பரிசாக வழங்கப்படும் தொகை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

டி-20 உலகக் கோப்பைப் போட்டி கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வரும் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை நடக்கிறது. இதில் 16 அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகையாக, 56 லட்சம் டாலர்கள் (சுமார் 42கோடி) யை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒதுக்கீடு செய்துள்ளது.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 16 லட்சம் டாலர்கள்( ரூ.12 கோடி) பரிசாகவும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.6 கோடியும் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடக்கும் அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கும் தலா ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும்.

அரையிறுதிக்குள் செல்லாமல் தோல்வி அடையும் 8 அணிகளுக்கு தலா ரூ.52 லட்சம் பரிசுத் தொகையும், முதல் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும். கடந்த 2016ம் ஆண்டைப் போல் சூப்பர் 12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.