முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு வங்க கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங் களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுசேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணத்துக்கான அரசாணை வெளியீடு

Halley karthi

சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

Halley karthi

200 பேர் ஆடையில்லாமல் போட்டோ ஷூட்: ஏன்?

Halley karthi