கால்பந்து உலகின் ஜாம்பவான் “The goat” என அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து விடைபெற்றார். அர்ஜண்டினா-பெனின் அணிகளுக்கு இடையில் புவெனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டேடியோ மானுமெண்டல் மைதானத்தில் இன்று நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியே மெஸ்ஸியின் இறுதி சர்வதேச போட்டியாக அமைந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானம் முழுவதும் நீல மற்றும் வெள்ளை நிறக் கொடிகளாலும், “நன்றி மெஸ்ஸி” என்ற 10-ஆம் எண் ஜெர்சிகளாலும் நிறைந்திருந்தது.
இந்தப்போட்டியின் துவக்கத்தில் தனது மகன்களுடன் மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி தேசிய கீதம் பாடிய போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க அழுதார். இதனைத்தொடர்ந்த்து மெஸ்ஸியின் ஜெர்ஸி எண்ணை குறிக்கும் வகையில் ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது அப்போது 80 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டியும், மெஸ்ஸி…மெஸ்ஸி…என ஆரவாரமிட்டும் மரியாதை செலுத்தினர்.
இதனித்தொடர்து நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெனாலிட்டி கிக் மூலம் மெஸ்ஸி கடைசி கோலை அடித்தார். இதனையடுஇத்து போட்டி முடிவுக்கு வந்தது. இறுதி விசில் ஒலித்ததும் நடுவரும் எதிரணி வீரர்களும் அவரை வாழ்த்துகின்றனர். மேலும், ஓரிருவர் செல்ஃபி கோரிக்கைகளும் எழுகின்றன. ஒரு மகத்தான விளையாட்டு வாழ்க்கைக்கு இது ஒரு பொருத்தமான முடிவு. ஓட்டமெண்டி மற்றும் பாஸ் ஆகியோருக்கு கோல் அடிக்க உதவிய மெஸ்ஸி, பின்னர் பெனால்டி மூலம் தானும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அவரது கோல்களின் எண்ணிக்கை 126 ஆகவும், உதவிகள் 70 ஆகவும் உயர்ந்துள்ளது.
போட்டிக்கு பிறகு மெஸ்ஸியின் புகழை போற்றும் வகையில் ட்ரோன்காட்சிகள் அரங்கேறின. இதனைகண்டு ரசித்த மெஸ்ஸி மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்தார்.
இதனிடையே ர்சைகரிகளிடம் பேசிய மெஸ்ஸி, “இன்று இரவு நான் முதலில் நினைப்பது என் அப்பாவைத்தான். உங்கள் அனைவருக்கும் நன்றி மட்டுமே சொல்ல முடியும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சீருடையைத் தக்கவைத்துக் கொண்டது பெரும் பெருமையாகும். நாங்கள் போராடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை, எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை. அர்ஜென்டினாவுக்காக விளையாடுவது மிகவும் அழகான விஷயம்.நாங்கள் மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் தருவாயில் இருந்தோம். உலகக் கோப்பையில் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம். இந்தச் சீருடைக்காக நாங்கள் எப்போதும் எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
என் சக அணி வீரர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என் கனவுகள் அனைத்தையும் நனவாக்கினீர்கள். உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, ஃபைனலிசிமா. என்னைச் சுற்றிப் போராளிகள் இருந்தனர். இதை நான் இழக்கப் போகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் எங்கு சென்றாலும், மைதானம் எப்போதும் நிரம்பி வழிந்தது. நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் எங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுவது போல் உணர்ந்தேன். நான் இந்த இடத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் இந்தக் களத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன், உங்கள் அனைவரையும் நினைத்து ஏங்குவேன். நான் ஒரு அர்ஜென்டினியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். என் கனவை நிறைவேற்றியதில் பெருமைப்படுகிறேன்” என்று பேசினார்.




