மெல்போர்னின் இந்திய திரைப்பட விழா 2023க்கான பரிந்துரைகளில் ‘பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2’, ‘காந்தாரா’, ‘சீதா ராமன்’, ‘டார்லிங்ஸ்’, ‘ஆக்ரா’ மற்றும் ‘தி ஸ்டோரி டெல்லர்’ ஆகியவை முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு வெளியே நடைபெறும் மிகப்பெரிய இந்தியத் திரைப்பட விழாவாக, ஐஐஃப்எம் (IIFM) உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. உலக புகழ் பெற்ற இந்த திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருதுகளுக்கான பரிந்துரைகளை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, ஐஐஃப்எம் குழுவின் நடுவராக இயக்கியதற்காக ஆஸ்கார் விருது பெற்ற ஆஸ்திரேலிய திரைப்படத் தயாரிப்பாளர் புரூஸ் பெரெஸ்ஃபோர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய சினிமாவில் ஜூன் 1, 2022 முதல் 31 மே 2023 வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஆய்வு செய்த பிறகு, ஐஐஃப்எம் ஆலோசனைக் குழு, தனது பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.
இந்த விழாவிற்கான பரிந்துரைகளில் ‘பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2’, ‘காந்தாரா’, ‘சீதா ராமன்’, ‘டார்லிங்ஸ்’, ‘ஆக்ரா’ மற்றும் ‘தி ஸ்டோரி டெல்லர்’ திரைப்பட பரிந்துரைகளில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர் பிரிவில், ‘ஜூபிலி’ மற்றும் ‘ட்ரையல் பை ஃபயர்’ ஆகியவை பரிந்துரைகளில் முன்னிலை வகிக்கின்றன. இதே போல ஓடிடி பிரிவில், ‘ட்ரையல் பை ஃபயர்’, ‘ஜூப்ளி’ மற்றும் ‘டெல்லி க்ரைம் சீசன் 2’ போன்ற தொடர்கள் அதிக எண்ணிக்கையிலான பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.





