நாளை வெளியாகிறது யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்!

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கி, யோகிபாபு நடிக்கும் படத்தின் தலைப்பு நாளை மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. வைகைபுயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான “இம்சை அரசன் 23-ம் புலிகேசி”…

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கி, யோகிபாபு நடிக்கும் படத்தின் தலைப்பு நாளை மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

வைகைபுயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான “இம்சை அரசன் 23-ம் புலிகேசி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சிம்பு தேவன். இந்த படத்தை பிரபல இயக்குனர் சங்கரின் தயாரித்தார். அவர் தன்னுடைய 17 ஆண்டு திரை பயணத்தில் இதுவரை அவர் 7 திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து 2010ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படமும், 2015ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “புலி” திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பீரியட் படங்களில் வெற்றி கண்ட சிம்பு தேவன் அதன்பிறகு 24-ம் புலிகேசி என்ற படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதிலும் நடிகர் வடிவேலுவை நாயகனாக நியமிக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதன் பிறகு அந்த திரைப்படத்தை பிரபல நடிகர் யோகி பாபுவை வைத்து சிம்புதேவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஒரு மீனவ கதையை யோகி பாபுவுக்கு, சிம்புதேவன் எழுதியுள்ளதாகவும், அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் சில வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

https://twitter.com/iYogiBabu/status/1679786742235398144

இந்த சூழல் மாலி & மான்வி என்ற நிறுவனத்தின் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்க உள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கியமான தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விட்டுப்போன இரு கதைகளில் ஒரு கதையாக இந்த படம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

https://twitter.com/chimbu_deven/status/1679847687653404672

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இயக்குனர் சிம்பு தேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், யோகிபாபுவுடன் அவர் இயக்க இருக்கும் படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நாளை மாலை படத்திற்கான தலைப்பை வெளியிடப்போவதாகவும், மேலும் அதனை பிரபல இயக்குனர்களான வெங்கட் பிரபுவும், விக்னேஷ் சிவனும் வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.